
எங்களின் உருவாக்கம் – ஒரு தேவையான புரட்சி
பாடுபட்டோம்…
போராடினோம்…
ஆனால் எப்போதும் எங்களைப் பற்றிய செய்திகள் வேறு யாராவது வாயில்தான் வந்தது.
இனி நாங்களே எங்கள் குரலை பேசப்போறோம்!
தமிழருக்கான அத்தனை பிரச்சினைகளையும் பேசப்போகிறோம்
தமிழரின் குரல் என்பது ஒரு சாதாரண ஊடக மேடை இல்லை.
இது ஒரு உணர்வு.
இது ஒரு போராட்டக் குரல்.
இது நம் வரலாற்றை மீட்டெடுக்க தயாரான ஊடகம்.
1. தமிழரின் குரல் மற்றும் தேசத்தின் குரல் என இரு மாதாந்த சஞ்சிகை வெளியீடு
மாதாந்த சஞ்சிகை ஒன்று – “தமிழரின் குரல்”
ஒவ்வொரு மாதமும் தமிழர் சமுகத்தை பிரதிபலிக்கும் சஞ்சிகை.
மாதாந்த சஞ்சிகை இரண்டு-தேசத்தின் குரல் கவிதைகள் கட்டுரைகள் நேர்காணல்கள்
“ஒரு மாதம் – பல உண்மை – இரு குரல்!”
2.ஆவணப்படம்
அடக்கப்பட்ட கதைகள் – யாரும் ஏன் என்று கேட்காத கதைகள்.
தாய்மொழிப் பாதுகாப்பு மாற்றும் மக்களின் கண்ணீர்கள்.
“கேட்காத குரல்களுக்கு காட்சி கொடுக்கிறோம்!”
3. புத்தகங்கள் –
உண்மையை வார்த்தைகளால் கட்டிய வரலாறுகள்.
தற்காலிக தமிழர் அனுபவங்கள் வாழ்க்கைப் பதிவுகள்.
முந்தய தமிழர் வரலாறுகள்
உலகத்தமிழர் வரலாறுகள்
நம்மவர்களின் புத்தகங்கள்
“ஒரு புத்தகம் – பல புரட்சி!”
4. “உண்மை பேசும் நேரம்”
“எமது குரல் எமது கதை” – மக்கள் பேசும் நேரம்.
தமிழ் சமுக சேவையாளர்களுடன் உரையாடல்கள்.
“நம்ம கதைகள் நாமே பேசுவோம்!”
5. ஏன் தமிழரின் குரல் அவசியம்?
எங்களுக்கான கதைகளை எங்களுக்கு உரிய முறையில் சொல்வதற்காக.
தமிழனின் குரல் தனக்கே உரிய இடத்தில் ஒலிக்க வேண்டும் என்பதற்காக.
எமது வரலாறுகளை உண்மைத்தன்மையுடன் சொல்ல
எங்கள் உண்மைகள் எங்களிடம் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக!
தமிழ் மக்களின் சார்பில் இருந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காக
6. நாம் என்ன செய்யப்போகிறோம்
நம் மக்களுக்கு அரசியல் கற்றுக் கொடுக்கப்போகிறோம்
அரசியல் விழிப்புணர்வு நடாத்த போகிறோம்
ஒவ்வொரு அரச நடத்தையிலும் தமிழர்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்று சொல்லப்போகிறோம்
செய்தி அரசியலையும் பொய் வாக்குறுதி அரசியலையும் உடைக்க போகிறோம்
நாம் எப்போதும் தமிழரின் பக்கம் நின்று செயற்படுவோம்
எங்கெல்லாம் தமிழர்கள் துன்புறுகிறார்களோ ஒடுக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் எமது குரலை பலமாக சத்தமாக எழுப்புவோம்
7. எங்களின் இலக்கு:
“குரல் கொடுப்போம்… மாறட்டும் வரலாறு!”
“ஒலி அல்ல… உணர்வு.”
“படிக்க வைக்கும் பக்கம் இல்லை உண்மையை உணர வைக்கும் பக்கம்!”
8. எங்களைப் பற்றி – உருவாக்கியவன் குரலில்
நிறுவனர்: தமிழ்ச்செல்வன்
துவக்கம்: 2025 யாழ்ப்பாணத்தில் இருந்து
நம் மக்கள் புறவுலக ஊடகங்களை நம்பாமல்
நம் குரலே நம் ஊடகமென்று நம்பும் நாளை உருவாக்குவது!