karuna

சிறிலங்கா இராணுவத்தினர் இழைத்த போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்காக உலக நாடுகள் இவர்களை தடை செய்யும்போது எங்கள் மண்ணில் நாம் வாழ்வதற்கும் எழுதுவதற்கும் அச்சுறுத்தலை விடுவிக்கும் வேலைகளில் இராணுவத் தரப்பு ஈடுபடுகிறது.

எனது நாவல் வெளியீட்டிற்கான அழைப்பிதழை வழங்கிக் கொண்டிருந்த வேளையில், இந்த அழைப்பிதழை தமக்கு இராணுவப் புலனாய்வாளர்கள் முன்னரே அனுப்பி நிகழ்வு பற்றி விசாரித்ததாக கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் என்னிடம் கூறினார்.

ஆட்சி மாறியும் இராணுவத்தின் ஒடுக்குமுறைகளின் காட்சி இன்னமும் மாறாமல் இருக்கும் நிலையில் பிரிட்டனர் அரசு, இலங்கை இராணுவ அதிகாரிகள் மீது விதித்த தடையைக் கண்டு இனவழிப்புப் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆறுதலை வெளிப்படுத்துகின்றனர்.

பிரிட்டனின் அதிரடித்தடை

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்து முன்னாள் இராணுவ  தளபதிகள் கடற்படை தளபதி மற்றும் கருணா அம்மான் ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை அறிவித்துள்ளது.

 இலங்கையின் உள்நாட்டு போரின்போது பாரதூரமான மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்கள் என்ற அடிப்படையில் முன்னாள் இராணுவதளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொட, முன்னாள் இராணுவதளபதி ஜகத்ஜெயசூரிய, கருணா குழு என்ற துணைப்படைக்கு தலைமை தாங்கிய கருணா அம்மான் முதலியோருக்கு எதிராக பிரிட்டன் அரசு தடையை அறிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள, பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகம், “பிரிட்டன் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது பாரதூரமான உரிமை மீறல்கள்  துஸ்பிரயோங்களில் ஈடுபட்டமைக்காக இலங்கையின் முன்னாள் தளபதிகள் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதி ஆகியோருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது.

பாரதூரமான மனித உரிமை மீறல்கள் துஷ்பிரயோகங்களிற்கு  பொறுப்புக்கூறலைஉறுதி செய்வதும், தண்டனையின் பிடியிலிருருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரத்தை தடுப்பதும் இதன் நோக்கம்.

இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் மனித உரிமைகள் இணைந்து பணியாற்றுவது குறித்து பிரிட்டன் அர்ப்பணிப்புடன் உள்ளது,தேசிய ஐக்கியம் தொடர்பான அவர்களின் அர்ப்பணிப்பை பிரிட்டன் வரவேற்கின்றது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது சட்டவிரோத படுகொலைகள் சித்திரவதைகள் பாலியல்வன்முறைகள் உட்பட பாரிய மனித உரிமை மீறல்கள் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டமைக்காக நால்வருக்கு எதிராக தடை அறிவிக்கப்பட்டதாகவும் போக்குவரத்து தடைகள்,சொத்துக்களை முடக்குதல் உட்பட பல நடவடிக்கைகள் இந்த தடைகளில் உள்ளடங்குகின்றன.

வரவேற்கும் கனடா

“இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளதை நான் வரவேற்கின்றேன்…” என்று கனடாவின் நீதியமைசர் ஹரி ஆனந்தசங்கரி  தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது என்று கூறியுள்ள ஹரி ஆனந்தசங்கரி  2023 இல் கனடா மகிந்த ராஜபக்ச கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விதித்த தடைகளை தொடர்ந்து பிரிட்டனும் தடைகளை விதித்துள்ளமையினையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கும்,சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் கனடா தொடர்ந்து பாடுபடும் என்றும் கனடா நாட்டின் ஆதரவை அவர் குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *