
1. “ஆயிரம் மைல் பயணம், ஒற்றை அடியில் இருந்து தொடங்குகிறது!
பொருள்: பெரிய சாதனைகள் சிறிய, நிலையான செயல்களில் இருந்தே தொடங்குகின்றன.
2. “ஒரு மரத்தை நடுவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறந்த நேரமாக இருந்தது. அடுத்த சிறந்த நேரம் இப்போதுதான்
பொருள்: மதிப்புமிக்க ஒன்றைத் தொடங்க, எப்போதும் தாமதப்படுத்தக் கூடாது.
3. “மெதுவாக முன்னேற பயப்படாதீர்கள்; அசையாமல் நிற்பதற்கு மட்டுமே பயப்படுங்கள்
பொருள்: நிலையான முன்னேற்றம், எவ்வளவு சிறியதாக இருந்தாலும், தேங்கி நிற்பதை விட சிறந்தது.
4. “நீர் தன்னைக் கொண்டிருக்கும் பாத்திரத்திற்கு ஏற்ப தன்னை வடிவமைத்துக் கொள்வது போல, ஒரு ஞானி சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறான்
பொருள்: வெற்றிக்கு நெகிழ்வுத்தன்மை மற்றும் தகவமைப்புத் திறன் மிகவும் அவசியம்.
5. “நீங்கள் யாராக இருக்க வேண்டும் என்று நினைக்கும்போது பதற்றம் ஏற்படுகிறது. நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதுதான் நிம்மதி
பொருள்: உண்மையான அமைதி என்பது உங்கள் உண்மையான சுயத்தைத் ஏற்றுக் கொள்வதிலிருந்தே வருகிறது.
6. “மெதுவாக வளர்வதற்கு பயப்படாதே, அசையாமல் இருப்பதற்கு மட்டுமே பயப்படு
பொருள்: முன்னேற்றம், படிப்படியாக இருந்தாலும், செயலற்ற தன்மையை விட எப்போதும் சிறந்தது.
7. “சிறிய துரதிர்ஷ்டங்களை பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு மனிதன் ஒருபோதும் பெரிய விஷயங்களை சாதிக்க முடியாது
பொருள்: சிறிய தோல்விகளை எதிர்கொள்ளும் மன உறுதி வெற்றிக்கு மிக முக்கியமானது.
8. “கேள்வி கேட்பவன் 5 நிமிடங்கள் மட்டுமே முட்டாளாக பார்க்கப்படுவான். கேள்வியே கேட்காதவன் என்றென்றும் முட்டாளாகவே இருப்பான்
பொருள்: அறிவைத் தேட ஒருபோதும் பயப்படாதே.
9. “தாகம் எடுப்பதற்கு முன் கிணறு தோண்டுங்கள்.
பொருள்: நெருக்கடி ஏற்படுவதற்கு முன் எதிர்காலத்திற்குத் தயாராகுங்கள்.
10. “பயிற்சியில் எவ்வளவு அதிகமாக வியர்க்கிறீர்களோ, அவ்வளவு குறைவாக போரில் ரத்தம் சிந்துகிறீர்கள்
பொருள்: கடின உழைப்பும் முன்தயாரிப்பும் வெற்றிக்கு வழிவகுக்கும்.
11. “ஓர் அங்குல நேரம் ஓர் அங்குல தங்கம் மதிப்புள்ளது; ஆனால், ஓர் அங்குல தங்கத்தால் ஓர் அங்குல நேரத்தை வாங்க முடியாது”
பொருள்: நேரம் பணத்தை விட மதிப்புமிக்கது.
12. “குறைபாடுள்ள வைரம், ஒன்றும் இல்லாத கூழாங்கல்லை விட சிறந்தது ”
பொருள்: குறைபாடுகள் மதிப்பை மறைத்து விடக்கூடாது.
குமரன்
செய்தியாளர்