
உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் தமிழர்களின் உண்மை, உரிமை, எதிர்பார்ப்பு மற்றும் போராட்டங்களை வெளிக்கொணரும் ஒரு புதிய சமூக ஊடக மேடையாக, “தமிழரின் குரல்” இன்று தனது பயணத்தை தொடங்குகிறது.
தமிழர்கள் எப்போதும் தங்களை சார்ந்த செய்திகளை மற்றவர்கள் வாயிலாக கேட்டுக்கொண்டிருக்க முடியாது. இப்போது, தமிழரின் குரல் தமிழ் மக்கள் பேசும் மேடையாக உருவாகிறது. இது ஒரு பத்திரமான பயணத்தின் தொடக்கம் மட்டுமே. இனி எங்கள் குரலை அடக்க முடியாது
“ஒரு தேசத்தின் இருண்ட வரலாற்றை ஒளியில் கொண்டு வருவது எங்கள் கடமை!”
துவக்கம் எங்கே?
யாழ்ப்பாணம் மண்ணில் இருந்து இந்த குரல் ஒலிக்கிறது.
இது உங்கள் குரல். உங்கள் கதை. உங்கள் எதிர்காலம்.
வருகிறோம் – உண்மை, உணர்ச்சி, உரிமை கொண்டு!
நிறுவனர்
தமிழ்ச்செல்வன்